Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!

33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசுக்குச் சொந்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைவாக அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான விசேட பிரிவொன்று கடந்த மார்ச் மாதம் அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பிரிவு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே 2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரச நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதி (EPF) ஊழியர் நம்பிக்கை நிதி ((ETF) மற்றும் பணிக்கொடை (Gratuity) கொடுப்பனவுகள் தொடர்பில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தொகைகளை தீர்ப்பதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்து வருகிறது. 

குறித்த நிலுவைகளைச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபாயில் 2.8 பில்லியன் ரூபாய் 2026 ஆகஸ்ட் மாதம் முடிவடையும் போது செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அரச நிறுவனங்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

மூலப்பொருட்களின் செலவு அதிகரிப்பு விநியோகம் செய்யும் நடைமுறைகளில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் ஆர்டர்கள் இரத்து செய்யப்படல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அந்த சவால்களுக்கு மத்தியிலும் முக்கியமான 51 அரச நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 259.3 பில்லியன் ரூபாய் மொத்த இலாபத்தை பதிவு செய்துள்ளதாக அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாற்காலிகள் கொள்வனவு செய்த விவகாரம்; அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது
செய்திகள்

நாற்காலிகள் கொள்வனவு செய்த விவகாரம்; அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது

November 2, 2026
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!; கடலுக்கு செல்லவேண்டாம்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!; கடலுக்கு செல்லவேண்டாம்!

November 2, 2026
உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்
செய்திகள்

உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்

November 2, 2026
மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்
செய்திகள்

மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்

November 2, 2026
வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!
செய்திகள்

வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!

November 2, 2026
“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்

November 2, 2026
Next Post
உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்

உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு