Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை; குடியகல்வு திணைக்களம் தகவல்!

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை; குடியகல்வு திணைக்களம் தகவல்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கவும், தொழில் செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஸ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்துக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் திட்டம் செயற்படுத்தப்படுவதற்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்றதன் பின்னர், குடியுரிமை நிறுத்தப்பட்ட இலங்கையர்களின், இலங்கை அல்லாத மனைவி மற்றும் அவர்களது பிள்ளைகள் ஆகியோரும் வதிவிட விசாவிற்கு உரிமையுடையவர்களாக மாறுவர்.

இந்நிலையில், விண்ணப்பம் செய்யும் ஒருவர், விசாவிற்கு 1,000 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் இலங்கை அல்லாத மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு தலா 400 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படும் என்று குடிவரவு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாத வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பல முறையீடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் தனது கொள்கைக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

தற்போதைய தேவையின்படி, முதல் வருடத்தில் 3,000 குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 10,000 விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாக இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு விசாக்கள் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு அதன் பிறகு புதுப்பிக்கப்படும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெறுநர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும், பொதுச் சேவையில் சேரவும், வியாபாரத்தில் ஈடுபடவும், இலங்கையில் முதலீடு செய்யவும் முடியும்.

அத்துடன், விசாக்களை ரத்து செய்வதற்கான ஏற்பாடுகளும் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஸ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு
செய்திகள்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு

September 26, 2026
மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

September 26, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்; ஜனநாயக உரிமை இழக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு

September 26, 2026
Next Post
அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு