Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தொழில்முறை நிபுணர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய PAYE வரிச்சுமை அதிகமாக இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் இதற்கு மேலதிக நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், PAYE வரி முறையில் ஏற்கனவே சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், தொழில்முறை நிபுணர்களுக்கு இந்த வரி தொடர்ந்து கவலைக்குரிய விடயமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மற்றும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு PAYE வரியை குறைப்பதற்கு வரையறைகள் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தொழில்முறை நிபுணர்களுக்கு PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதே நிதியமைச்சின் கொள்கை ரீதியான நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் வழங்கப்படவுள்ள நிவாரணத்தின் அளவு அல்லது புதிய வரி விலக்கு வரம்பு தொடர்பில் அமைச்சர் எந்தவொரு குறிப்பிட்ட தகவலையும் வெளியிடவில்லை.

இதேவேளை, தற்போதைய பெறுமதி சேர் வரி (VAT) சுமையும் அதிகமாக இருப்பதாக அரசாங்கம் கருதுவதாக அவர் தெரிவித்தார். எனினும், எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் VAT குறைக்கப்படும் என உறுதியளிக்க முடியாது என்றும், எந்தவொரு மாற்றமும் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி நிலைமையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய வரிகளை அறிமுகப்படுத்தாமல், வரி இணக்கத்தை அதிகரித்தல் மற்றும் அரச செலவினங்களில் வீண்விரயத்தை குறைத்தல் ஆகியவற்றின் மூலம் அரச வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான தற்போதைய வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், நாட்டின் நிதி ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!
செய்திகள்

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!

November 11, 2026
அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!
செய்திகள்

அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!

November 11, 2026
சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க
செய்திகள்

சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க

November 11, 2026
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

November 11, 2026
வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!
செய்திகள்

வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!

November 11, 2026
யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

November 11, 2026
Next Post
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு