Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் காணாமலாக்கப்பட்ட குழந்தைகள் எங்கே?;சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் கேள்வி!

இலங்கையில் காணாமலாக்கப்பட்ட குழந்தைகள் எங்கே?;சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் கேள்வி!

2 years ago
in செய்திகள்

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்ததென சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த கேள்வியை அவர் கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது விஜயம் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற காலப்பகுதியில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

இந்த காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டதுடன் இந்த வருடம் இலங்கையில் நாடாளுமன்ற அதிபர் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் இவ்வருடம் இலங்கையின் தலைவிதியையும் மனித உரிமை பாதுகாப்பின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

நான் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டேன்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவதற்காகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆதரவை வழங்கவும் நான் இந்த விஜயத்தினை மேற்கொண்டேன்.

நான் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டதோடு காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தேன்.

அவர்கள் வெளிப்படுத்துகின்ற துணிச்சலும் மீள்எழுச்சி தன்மையும் நீதியை காண்பதற்கான அவர்களது உறுதிப்பாடும் எனது மனதை தொட்டுள்ளது.

உளவியல் சித்திரவதை இலங்கையில் மிகப்பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர் அவர்களிற்கு என்ன நடந்தது அத்தோடு காணாமல்போதல் என்பது மிகமோசமான வன்முறை.

அது முடிவிற்கு வராது மேலும் பாதிக்கப்பட்டவர்களிற்கு பலபல வருடங்களிற்கு இந்த வலி தொடரும் அத்தோடு மரணத்தை விட இது வலிமிகுந்தது.

வலியும் வேதனையும் மிக மோசமானதாக காணப்படுவதுடன் இது உளவியல் சித்திரவதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் தசாப்தங்களாக இந்த வலியும் வேதனையும் தொடரும்.

இது இலங்கையின் மீது விழுந்த கறை இந்த கறையை அகற்ற ஒவ்வொரு இலங்கை பிரஜையும் முன்வரவேண்டும் அத்தோடு அந்த குழந்தைகள் எங்கே நான்கைந்து மாத குழந்தைகள், மூன்று நான்கு வயதானவர்கள் நான் அவர்களின் படங்களை பார்த்திருக்கின்றேன்.

15 வருடங்களாகியும் பதில் இல்லை இது மிக நீண்டகாலம் அத்தோடு இது மன்னிக்க முடியாத குற்றம் இவர்கள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும்.

இவர்கள் தாங்களாக முன்வந்து சரணடைந்தவர்கள் அத்தோடு சரணடைவதற்கான பகுதிக்கு தாங்களாக சென்று சரணடைந்தார்கள் இந்தநிலையில் எங்கே அந்த குழந்தைகள்.” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!
செய்திகள்

ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!

October 3, 2026
பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?
செய்திகள்

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

October 3, 2026
எரிபொருள் பவுசர் கட்டண உயர்வு குறித்து CPC உடன் பேச்சுவார்த்தை; திங்கட்கிழமை இறுதி முடிவு!
செய்திகள்

எரிபொருள் பவுசர் கட்டண உயர்வு குறித்து CPC உடன் பேச்சுவார்த்தை; திங்கட்கிழமை இறுதி முடிவு!

October 3, 2026
Next Post
பொலிஸாரிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த பெண் மரணம்!

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த பெண் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.