Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை கடைக்குள் வைத்து பூட்டிய நபர்கள்!

சோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை கடைக்குள் வைத்து பூட்டிய நபர்கள்!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம்- தெல்லிப்பளையில் அனுமதியற்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் பரிசோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பளை சுகாதர வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பன்னாலை பகுதியில் இயங்கி வந்த அனுமதியற்ற உணவுப்பொருள் தயாரிக்கும் நிலையமே சோதனையிடப்பட்டது.

ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமையுள்ள பிரதேசவாசியொருவரும், சிங்கள பெண்ணொருவரும் அந்த தொழிற்சாலையை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த தொழிற்சாலையில் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அந்த தொழிற்சாலை இதுவரை முறைப்படியான பதிவுகளை பூர்த்தி செய்திருக்கவில்லை.

பதில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்காக சென்றுள்ளனர். தொழிற்சாலை பதிவு செய்யப்படாததை குறிப்பிட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, உரிமையாளர்களின் அடையாள அட்டையை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கேட்ட போது, சுகாதார பரிசோதகர்கள் இருவரையும் தொழிற்சாலைக்குள் வைத்து உரிமையாளர்கள் பூட்டிவிட்டனர்.

இதனையடுத்து தெல்லிப்பளை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர், தெல்லிப்பளை காவல்துறையினர் , பொதுச்சுகாதார பரிசோதகர்களை மீட்டெடுத்தனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய தொழிற்சாலை உரிமையாளரும், பெண்ணும் தலைமறைவான நிலையில், இன்று அவர்கள் இருவரும் தெல்லிப்பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு
செய்திகள்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு

September 26, 2026
Next Post
வட மாகாண ஆளுநர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு; கேள்வியெழுப்பியுள்ள பொதுமக்கள்!

வட மாகாண ஆளுநர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு; கேள்வியெழுப்பியுள்ள பொதுமக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு