பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 36 வயதுடைய சுகாதார உதவியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







