Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவு; சீன வெளிவிவகார துறை அமைச்சர் தெரிவிப்பு!

இலங்கையில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவு; சீன வெளிவிவகார துறை அமைச்சர் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

சிறிலங்காவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துறை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன துணை அமைச்சர் நேற்று (30) அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் அலுவலகத்தில் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு சீனா வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க, சீன துணை அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சிறிலங்காவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் சீனாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய துணை அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய சீனா ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அதிபர் ஊடக பிரிவு, சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங்கின் சிறிலங்கா விஜயம் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தச் சந்திப்பில், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, அதிபரின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்துகொண்டதாக அதிபர் ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில் சீனா இலங்கைக்கு பேராதரவு வழங்கியதுடன், பெருமளவு கடன் வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

சீன ஆதரவுடன் தேவையற்ற அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தததாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

August 1, 2026
இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து
செய்திகள்

நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து

August 1, 2026
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

August 1, 2026
17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!

August 1, 2026
Next Post
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட நடவடிக்கை!

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு