Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த 50ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிப்பாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கும் இடமாக பொதுநூலகம் விளங்கும்; இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிப்பு!

அடுத்த 50ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிப்பாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கும் இடமாக பொதுநூலகம் விளங்கும்; இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அடுத்த 50ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கும் இடமாக பொதுநூலகம் விளங்கும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆசியாவின் பிரமாண்ட நூலகத்திற்காக நூல்களை சேகரிக்கும் வகையில் புத்தக திருவிழா என்னும் நிகழ்வின் ஊடாக புத்தகங்களை சேகரிக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் முயற்சியினால் மட்டக்களப்பில் இந்த பிரமாண்ட நூலகம் அமைக்கப்பட்டுவரும் நிலையில் அதன் நிர்மாண பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா காணவுள்ள நிலையில் இந்த நூல் சேகரிக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மு.பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் ஏந்திரி சிவலிங்கம்,வவுனியா போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சுகுணன்,இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஆனந்தா சுவாமிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது புத்தக திருவிழாவினை ஆரம்பித்துவைக்கும் வகையில் நூல்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது பெருமளவானோர் புத்தகங்களை அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்த உயரிய பணிப்பு அனைவரது ஒத்துழைப்பினையும் வழங்குமாறு மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்புக்குழுவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நூலகத்திற்கு மூன்று இலட்சம் நூல்களை பெறும்நோக்கில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்த மக்களையும் உதவுமாறு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.

சிங்கள பேரினவாதிகளினால் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சோகமான ஒரு நாள் இன்று.நீங்கள் எதனை எரித்தாலும் பிழையான விடயங்கள் நிலைத்திருக்காது,சரியானவை சரியான இடத்தில் சேரும் என்பதை அப்படியானவர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் மிகப்பெரும் செய்தியை வழங்கியுள்ளதாகியுள்ளார்கள்.

மூன்று இலட்சம் நூல்களுடன் தான் பொதுநூலகம் திறக்கப்படும்.நாங்கள் திறப்பது புத்தக சாலை அதனை திறப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

பாடசாலை கல்வியை கற்று வைத்தியராகவும் பொறியியலாளராகவுரும் வருவது கல்வித்துறையின் அடிப்படை விடயம்.கண்டுபிடிப்புகள் புதிய மாற்றங்கள் மூலம் அனைத்தையும் ஒருங்கிணைத்து பேரறிஞ்சர்களை உருவாக்குவது தான் புத்தகங்களின் பணியாகும்.அந்த பணிக்கான அத்திவாரத்தினையே நாங்கள் இடுகின்றோம்.

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
வீடொன்றிற்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தை திருடிய சிறுவர்கள் கைது!

வீடொன்றிற்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தை திருடிய சிறுவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு