முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா காவல் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் காவல் நிலையத்தில் உள்ள கைத்துப்பாக்கியினை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (01) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, மைதிரிபுர பதவியா பகுதியினை சேர்ந்த 31 அகவையுடைய காவல்துறை உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த (30) ஆம் திகதி குறித்த காவல்துறை உத்தியோகத்தர் காவல் நிலையத்தில் உள்ள கைத்துப்பாக்கியினை திருடியுள்ளார்.
இதனையடுத்து திருடப்பட்ட கைத்துப்பாக்கியானது காவல் நிலையத்திற்குள் மறைத்துவைத்துள்ள நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கெப்பற்றிகொலாவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் வெலிஓயா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தனது நண்பருக்காக பன்றி சுடுவதற்க்கு துப்பாக்கியினை எடுத்து மறைத்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது