Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலியில் வெள்ளத்தில் மூழ்கிய வைத்தியசாலை; விமானம் மூலம் வெளியேற்றப்படும் நோயாளிகள்!

காலியில் வெள்ளத்தில் மூழ்கிய வைத்தியசாலை; விமானம் மூலம் வெளியேற்றப்படும் நோயாளிகள்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தென்பகுதியில் கொட்டும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் வீதியை குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் அந்த வீதிகளுடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதனால் அவர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நாளையதினம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலியில் அமைந்துள்ள நெலுவ வைத்தியசாலைக்கான அனைத்து நுழைவு வீதிகளும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், நெலுவ வைத்தியசாலையில் அவசர சிகிச்சை தேவைப்படும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளை விமானம் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக தவலம, நெலுவ, உடுகம மற்றும் ஹினிதும ஆகிய பகுதிகளில் படகுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சிறிலங்கா கடற்படை மற்றும் இராணுவத்தின் நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காலி பதில் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்
செய்திகள்

பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்

July 5, 2026
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?

July 5, 2026
சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்
செய்திகள்

சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்

July 5, 2026
டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
செய்திகள்

டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

July 5, 2026
கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 473 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 473 பேர் உயிரிழப்பு

July 5, 2026
பொருளாதார மீட்சிக்காக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை நீக்க அரசு தீர்மானம்
செய்திகள்

பொருளாதார மீட்சிக்காக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை நீக்க அரசு தீர்மானம்

July 5, 2026
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு