சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை அமுல்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த வழக்கில் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.








