சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு, வலயக்கல்வி பணிப்பாளராக தமிழ் அதிகாரி ஒருவர் மாகாண சபையினால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்மாந்துறையிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வியாபார நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பாடசாலைகள், வாகன போக்குவரத்து என்பனவற்றை இன்றைய தினம் (03) லுஹர் தொழுகை நேரம் வரை இடைநிறுத்தி எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அங்கிருக்கும் பொதுமக்களை வினவிய பொது இது ஒரு இன முறுகலை ஏற்படுத்தும் செயலாகவும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு செயலாகவும் இருக்கின்றது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதேசமயம் இந்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் நியமிக்கப்பட்ட வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார் இன்றைய தினம் பதவியேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.