Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பிலிருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மட்டக்களப்பிலிருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் சித்திவீதம் குறைவாக இருந்தாலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப்பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

நேற்று (03) மட்டக்களப்பு கல்வி பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயமானது விஞ்ஞான துறை,பொறியில் தொழில்நுட்பம்,உயிரியல் தொழில்நுட்ப பிரிவு போன்றவற்றில் அதிகரித்த சதவீதத்தினை காட்டியுள்ளது.

அந்த வகையில் உயிரியல் விஞ்ஞானதுறையில் 2.93வீத வளர்ச்சியும், பொறியில் தொழில்நுட்ப பிரிவில் 12.8வீத வளர்ச்சியும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 7.7வீத வளர்ச்சியும் கண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் இம்முறை பௌதீக விஞ்ஞான பிரிவில் 7.7வீத குறைவினையும், கலைப்பிரிவில் 7.4வீத குறைவினையும், வர்த்தக பிரிவில் 01வீத குறைவினையும் காட்டியுள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் 2.9வீத வீழ்ச்சியை கண்டிருக்கின்றது. இதற்கு காரணமாக கலைத்துறை பெறுபேறுகள் அமைந்திருக்கின்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் ஏ.எஸ்.எம்.ஷபான் என்பவர் பொறியில் தொழில்நுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தினையும் பெற்றிருக்கின்றார்.

2015ஆம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டபோதிலும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் முதலாவதாக மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

தற்போதைய கணிப்பின் படி மட்டக்களப்பு கல்வி வலயத்திருந்து 28மாணவர்கள் மருத்துவதுறைக்கும், 40மாணவர்கள் பொறியியல் துறைக்கும், வர்த்தக துறைக்கு 24மாணவர்களும்,சட்ட பீடத்திற்கு மூன்று மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக கலைத்துறையில் 31மாணவர்களும், பொறியியல் தொழில்நுட்ப துறையில் 10மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார்கள்.

பரீட்சை பெறுபேறுகளின் சித்தி வீதத்தில் வீழ்ச்சி கண்டாலும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

போரதீவுப்பற்று பிரதேசசபையின் முதல் அமர்வு
அரசியல்

போரதீவுப்பற்று பிரதேசசபையின் முதல் அமர்வு

June 10, 2025
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு
செய்திகள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு

June 10, 2025
தனியார் மற்றும் இலங்கை பேருந்துகள் தொடர்பில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கத் திட்டம்; போக்குவரத்து அமைச்சர்
செய்திகள்

தனியார் மற்றும் இலங்கை பேருந்துகள் தொடர்பில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கத் திட்டம்; போக்குவரத்து அமைச்சர்

June 10, 2025
கனடாவில் ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்
உலக செய்திகள்

கனடாவில் ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்

June 10, 2025
பேருவளையில் பொலிஸார் மீது தாக்குதல்; ஐந்து சந்தேக நபர்கள் கைது
செய்திகள்

பேருவளையில் பொலிஸார் மீது தாக்குதல்; ஐந்து சந்தேக நபர்கள் கைது

June 10, 2025
புத்தளத்தில் கணவன் 21 வயது மனைவியைத் தாக்கி கொலை
செய்திகள்

புத்தளத்தில் கணவன் 21 வயது மனைவியைத் தாக்கி கொலை

June 10, 2025
Next Post
காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் அக்ஸாரியன் நடைபவனியும்- பழைய மாணவர் ஒன்றுகூடலும்!

காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் அக்ஸாரியன் நடைபவனியும்- பழைய மாணவர் ஒன்றுகூடலும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு