Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
T20 உலக கிண்ண போட்டி ; அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!

T20 உலக கிண்ண போட்டி ; அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் டெலானி அதிரடியாக விளையாடி அயர்லாந்து சிறந்த நிலையை எட்ட உதவினார்.

வெறும் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அயர்லாந்து 96 ஓட்டங்களுக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ், அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக டெலானி 26 ஓட்டங்கள் அடித்தார்.

இதனைத்தொடர்ந்து 97 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் தலைவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விராட் கோலி 1 ஓட்டத்துடன் பிடிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக ரோகித் சர்மாவுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக ஓட்டங்களை சேர்த்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா, 36 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இதனிடையே டி 20 தொடரில் தனது 4 ஆயிரம் ஓட்டங்களையும் ரோகித் சர்மா கடந்தார். அதன்பிறகு காயம் காரணமாக ரோகித் சர்மா பெவிலியன் திரும்பினார்.

இதனையடுத்து ரிஷப் பண்டுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சூர்யகுமார் யாதவ் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்த ரிஷப் பண்ட் 36 (26) ஓட்டங்களும், ஷிவம் துபே (0) ஓட்டம் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் சார்பில் மார்க் ஆதிர் மற்றும் பெஞ்சமின் வொயிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, உலகக் கிண்ணத் தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!
செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!

November 12, 2026
அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!
செய்திகள்

அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!

November 12, 2026
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
செய்திகள்

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

November 12, 2026
பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
செய்திகள்

பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

November 12, 2026
நெதர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
செய்திகள்

நெதர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

November 12, 2026
பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!
செய்திகள்

பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!

November 12, 2026
Next Post
கிண்ணியா பிரதேச செயலகத்தில் மரம் நடுகை நிகழ்வு!

கிண்ணியா பிரதேச செயலகத்தில் மரம் நடுகை நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு