பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்காக 12.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், சமுர்த்தி வங்கிகள் ஊடாக வருடாந்தம் 3 சதவீத வட்டி வீதத்தில் கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, தகுதியுடைய குடும்பங்கள் அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபா வரை கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கடன் திட்டம் தனிநபர் அடிப்படையில் அல்லாமல் குழுக் கடன் முறையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, அவர்களின் பொருளாதாரச் சுயநிலையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.







