கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்றுத்தருவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனிடம் 31 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று, மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்தை பெற்று நீண்ட நாட்களாகியும், இளைஞரை கனடாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.
குறித்த இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.