நுவரெலியா, மார்காஸ் தோட்டப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் கடந்த 10ஆம் திகதி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த 27 வயதான நபரே நேற்று (12) மாலை நுவரெலியா பேருந்து நிலையத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் திரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் போது, கடந்த நவம்பர் 10 ஆம் திகதி திரப்பனை காவல் பிரிவில் காவலிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பிலும் குறித்த சந்தேகநபர் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.







