Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க தயாராகும் திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன்!

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க தயாராகும் திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன்!

12 months ago
in செய்திகள், விளையாட்டு

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன் பஹ்மி ஹசன் சலாமா இம்மாதம் ஜூன் 15 ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கவுள்ளார்.

தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய இவர் கடந்த மூன்று மாதங்களாக இந்தச் சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து தலைமன்னார் வரையான 32 கிலோமீற்றர் தூரத்தை 8 மணி நேரத்தில் தான் கடக்கவுள்ளதாக இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சலாமா கூறினார்.

கடந்த 18ஆம் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரையிலான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்தி கடந்துள்ளார்.

இவருக்கான நீச்சல் பயிற்சிகளை விமானப்படை கோப்பிறல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகின்றார்.

இந்தப் பயிற்றுநர் 2021 ஆம் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்று மீளவும் அங்கிருந்து தலைமன்னாருக்கு 28 மணித்தியாலயம் 19 நிமிடம் 58 செக்கனில் நிறைவு செய்து ஆழிக்குமரன் ஆனந்தன் ஏற்படுத்தியிருந்த 51 மணி நேர சாதனையை முறியடித்த சாதனையாளர் ஆவார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையைச் சேர்ந்த ஹரிகரன் தனவந்தையும் இவரே பயிற்றுவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

பஹ்மி ஹசன் சலாமாவுக்கு பாதுகாப்புப் படை,விளையாட்டு அமைச்சு மற்றும் இச்சாதனை ஒளிப்பதிவு இவருடன் மேலும் கண்காணிப்பு போன்ற விடயங்களுக்கு அனுமதி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட பாடசாலை மட்டத்தில் நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிக் கின்னங்களையும் பெற்றுள்ளர். இவரின் தந்தை, மற்றும் பயிற்றுவிப்பாளர், இவரது பாடசாலை அதிபர் ஆகியோர்களும் இவருக்கு உந்து சக்தியாக உள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி
உலக செய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி

June 10, 2025
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்
செய்திகள்

யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்

June 9, 2025
கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
செய்திகள்

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

June 9, 2025
நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்
உலக செய்திகள்

நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

June 9, 2025
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்
செய்திகள்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்

June 9, 2025
வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
செய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

June 9, 2025
Next Post
இலங்கையர்களை இராணுவ சேவைக்கு சேர்க்கமாட்டோம்; ரஷ்யா தெரிவிப்பு!

இலங்கையர்களை இராணுவ சேவைக்கு சேர்க்கமாட்டோம்; ரஷ்யா தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு