பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் மருத்துவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த 30 வயதுடைய இளம் மருத்துவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவர் தவறான முடிவெடுத்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.