மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் இன்றைய தினம் புதுக்கடை 7ஆம் இலக்க போக்குவரத்து பிரிவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.








