மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, அங்குள்ள தாதியர்களுடன் இணைந்து ‘செல்ஃபி’ புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.
மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபாய் செலவில், அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக இந்தப் பிரிவு நிர்மாணிக்கப்படவுள்ளது.
நிர்மாணப் பணி 2028ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







