Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாலர்சேனை கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்த்துவைத்த மட்டு தொழிலதிபர்!

பாலர்சேனை கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்த்துவைத்த மட்டு தொழிலதிபர்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பாலர்சேனை கிராமத்தின் மிக நீண்ட கால பிரச்சனையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வினை பிரபல தொழிலதிபரும் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவருமான தேசபந்து முத்துக்குமார் செல்வராசா பெற்றுக்கொடுத்துள்ளார்.

இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையினை கேட்டறிந்து கொண்ட குறித்த தொழிலதிபர், இவர்களின் குடிநீர் பிரச்சனையினை தீர்த்து வைக்கும் முகமாக ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கொங்கிறீட் குழாய் கிணறுகள் என்பவற்றை அமைத்து கொடுத்து நீண்டகால குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவின் வேப்பவெட்டுவான் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பாலர்சேனை கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை என்பது நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இங்கு 90 வீதமான மக்கள் கூலித் தொழிலை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை ஈட்டிவருகின்ற நிலையிலேயே இவ்வாறான குடிநீர் பிரச்சனையினையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த கிராமத்தில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீரை பெற்று வந்திருந்த போதிலும் அவை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பழுதடைந்து பாவனைக்கு உதவாமல் காணப்பட்டு வரும் நிலையில் அவற்றை திருத்தி அமைத்து கொடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இக்கிராமத்தில் 06 குழாய் கிணறுகளும், கல்லால் கட்டப்பட்ட சில பொது கிணறுகளும் காணப்பட்ட நிலையில் பொது கிணறுகள் அனைத்தும் கோடை காலத்தில் வற்றி விடும் சூழல் காணப்படுகிறது.

குழாய்கிணறுகளில் தண்ணீர் இருந்தாலும் அவை பழுதடைந்துள்ளதால், தண்ணீரை பெற்று கொள்ள முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை அனுபவித்து வந்த நிலையில் வரட்சிக் காலமும் ஆரம்பமாகியுள்ளதால் அப்பகுதி மக்கள் தூர இடங்களுக்கு சென்று வெகு சிரமத்தின் மத்தியில் தண்ணீரை பெற வேண்டியுள்ளது.

இக்குழாய் கிணறுகளை திருத்தி தருமாறு பலரிடம் அப்பகுதி பொது மக்களால் பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் எவரும் முன்வந்து உதவி செய்யாதவிடத்து, குறித்த கிராமத்திற்கு சென்ற மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும், ஈஸ்ட் லகூன் விடுதியின் உரிமையாளருமான தேசபந்து செல்வராசா இவர்களது பிரச்சனைக்கான தீர்வினை உடனடியாக பெற்றுக்கொடுத்துள்ளார்.

அத்தோடு கொங்கிறீட் குழாய்களை பொருத்தி நிரந்தரமான சில கிணறுகளையும் அமைத்து கொடுப்பதற்குமான உரிய நடவடிக்கைகளையும் இவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதேசமயம் பால்சேனை கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை படிப்படியாக தீர்த்து வைக்க தான் முயற்சிகளை மேற்கொண்டு தீர்வை பெற்றுத் தருவதாகவும் இதன் போது தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்

September 30, 2026
ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!
செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!

September 30, 2026
ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!
செய்திகள்

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

September 30, 2026
அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

September 30, 2026
மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
காணொளிகள்

மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

September 30, 2026
திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்;  மொனராகலையில் விநோத சம்பவம்
செய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்

September 30, 2026
Next Post
யாழில் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு!

யாழில் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.