Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
30,000ற்க்கு உணவு உட்கொண்டவர்களிடம் 10,000 வரி அறவிட்ட கொழும்பு பிரபல உணவகம்!

30,000ற்க்கு உணவு உட்கொண்டவர்களிடம் 10,000 வரி அறவிட்ட கொழும்பு பிரபல உணவகம்!

2 years ago
in செய்திகள்

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்ற மோசடியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது முகநூலில் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவு ஒன்றை இட்டுள்ள நிலையில் குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

அவர் வெளியிட்ட பதிவில்,

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வடைக்கும் ஒரு கிண்ணம் தேநீருக்கும் 1000 ரூபாய் சுற்றுலா பயணியிடம் வாங்கி ஏமாற்றிய தேநீர் கடை உரிமையாளர் பற்றியும் பிறகு அவர் தண்டிக்கப்பட்டதையும் பார்த்தோம்.

ஆனால் பெரிய பணக்கார நபர்களினால் செயற்பட்டு வரும் ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளில் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பதை இன்று ஆதாரத்துடன் பார்ப்போம்.

நேற்று முன்தினம் (18-06-2024) இரவு வேளையில் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு 5 நண்பர்களுடன் இரவு போசனத்துக்காக சென்றிருந்தேன்.

இறுதியாக அவர்களுடைய ரசீதை பார்த்தபோது எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் பிரதான உணவுக்கு 30240 ரூபாய்கள் என்றும் வரியுடன் 40,638 ரூபாய்கள் என்று போட்டிருந்தது.

அதாவது, 34.38% வரி போடப்பட்டு இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வட் வரி 18% என்ற படியால் மேலாளரை அழைத்து எவ்வாறு வரி இப்படி அதிகரித்தது என்று விசாரித்தேன். அவர் 18% வட் வரி என்பதை உறுதி செய்ததுடன் சேவை வரி 10% என்று விளக்கம் அளித்தார்.

நான் இது 28% ஐ விட அதிகமாக இருக்கிறது என்று கூறிய போது 2% சுற்றுலா பயணி வரி என்று கூறினார்.

நான் என்னுடன் வந்த மொத்தமாக 6 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டில் இருந்து வந்தவர் நீங்கள் எவ்வாறு எங்களிடம் சுற்றுலா பயணி வரி விதிக்க முடியும் என்று கேட்டபோது அவரால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை.

மேலும் மேலதிகமாக 2% வரி அல்ல 28% வரிக்கு மேலதிகமாக 6.38% வரி அறவிடப்பட்டுள்ளது.

அதற்குரிய விளக்கம் எதுவும் உங்களுடைய ரசீதில் இல்லை என்று கூறியபோது அவர் பதிலை சொல்ல முடியாமல் திணறினார்.

சிறுகடை உரிமையாளரை 1000 ரூபாய் வடைக்காக தண்டித்தார்கள்.

ஆனால் நாள் தோறும் இவ்வாறு பல லட்சம் ரூபாய்களை சுற்றுலா பயணிகளிடமும் இலங்கை குடிமக்களிடமும் ஏமாற்றி வசூலிக்கும் இவர்களை போன்றவர்களை தண்டிப்பது யார்?

ஊழல் நிறைந்த ராஜபக்சர்களின் ஆட்சிக்கு பிறகு ஊழல் அனைத்து மட்டங்களிலும் தலைவிரித்தாடும் நிலையில் இவர்களை தண்டிக்கும் ஆட்சி மாற்றம் ஏற்படுமா ? என அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது என்விடியா!

மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது என்விடியா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு