Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவு பகுதியில் 8 மாதங்களாக அதிபர் இல்லாத பாடசாலை; பொது மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

முல்லைத்தீவு பகுதியில் 8 மாதங்களாக அதிபர் இல்லாத பாடசாலை; பொது மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

2 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பாடசாலை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று புதன்கிழமை (19) காலை 7 மணியளவில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ்கலவன் வித்தியாலயத்திற்கு கடந்த 8 மாதங்களாக அதிபர் இல்லாமலே இயங்கி வருகின்றது. இப்பாடசாலையில் 57 மாணவர்கள் கற்கின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு கல்வி சரியாக கிடைக்கவில்லை எனவும், இது தொடர்பாக வலயக்கல்வி பணிமனையில் முறையிட்டிருந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது பாடசாலைக்கு நிலையாக அதிபரை நியமிக்குமாறும், அதனை எழுத்து வடிவில் ஆவணமாக தரும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி பாடசாலை வாயிலை மறித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார், பெற்றோருடன் கலந்துரையாடி வீதியில் நின்ற ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுப்பியிருந்தனர்.

அங்கு வருகை தந்த வலயக்கல்வி பணிப்பாளர் இ.தமிழ்மாறன் , பொலிஸார், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் பாடசாலை வளாகத்திற்குள் குறிப்பிட்ட சிலருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

எழுத்து மூலமான உறுதிமொழி தரமுடியாது, கிழக்கு முள்ளிவாய்க்கால் பாடசாலைக்கு அதிபர்கள் வர விருப்பம் இன்மையால் இதுவரை அதிபர் நியமிக்கவில்லை என தெரிவித்த அவர், அதிபர் ஒருவரை நியமிக்க முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு

June 14, 2026
அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்
செய்திகள்

அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்

June 14, 2026
இலங்கையில் எல் நினோ பாதிப்பு; மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என தகவல்
செய்திகள்

இலங்கையில் எல் நினோ பாதிப்பு; மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என தகவல்

June 14, 2026
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு
செய்திகள்

பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

June 14, 2026
என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்
செய்திகள்

என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்

June 14, 2026
Next Post
இணைய வழியில் கடவுச்சீட்டு பெறுவதில் தாமத நிலை!

இணைய வழியில் கடவுச்சீட்டு பெறுவதில் தாமத நிலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு