கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கணிசமான அளவு ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த உப தவிசாளர் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் போனஸ் ஆசனம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரிவானதுடன், பின்னர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








