Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுவிஸில் பல கொடிகள் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள்!

சுவிஸில் பல கொடிகள் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஏராளமான வெளிநாடுகளில் உள்ள பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான நிதியை பதுக்கி வைத்துள்ளனர்.

அந்தவகையில் பெரும்பாலான இந்திய பண முதலைகளும் சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் பதுக்கி வத்துள்ள நிலையில் இந்த கணக்கு மற்றும் தொகை விவரங்களை சுவிட்சர்லாந்து தேசிய வங்கி அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது.

இந்தியாவின் வரி ஏய்ப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த விவரங்களை வழங்கி வருகிறது. இதில் கடந்த ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் குறித்த விவரங்கள் தற்போது வழங்கப்பட்டு உள்ளன.

இதில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியர்களின் பணம் இருப்பு சரிந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதன்படி வெறும் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங் (சுவிஸ் பணம்) ரூ,9,771 கோடி அளவிலான தொகை மட்டுமே தற்போது இந்தியர்களின் கணக்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது கடந்த 2021-ம் ஆண்டு 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்தது. அந்தவகையில் 70 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. அதேநேரம் 3-வது நாடு வழியாக கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்டோரின் கணக்கு விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை என சுவிஸ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கடந்த 2006-ம் ஆண்டில் 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு இந்தியர்களின் பணம் இருந்தது. பின்னர் இந்த தொகை படிப்படியாக சரிந்து வருகிறது.

இடையில் ஒருசில ஆண்டுகளில் மட்டும் இந்த தொகை லேசாக அதிகரித்து இருந்தது. அதேசமயம் சுவிஸ் வங்கிகளில் தற்போது அதிக பணத்தை சேமித்திருக்கும் வெளிநாட்டினரில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

இந்தியா தற்போது 67-வது இடத்தில் உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இது 46-வது இடத்தில் இருந்தது. இதைப்போல பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாட்டினரின் இருப்பும் குறைந்திருப்பதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
Next Post
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்து மீறி இலங்கைக்கு வருகை; ரணிலிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை!

இந்திய கடற்றொழிலாளர்கள் அத்து மீறி இலங்கைக்கு வருகை; ரணிலிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு