Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

2 years ago
in செய்திகள்

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது நெடுந்தீவு காவல் நிலையத்துக்கு முன்பாக நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் (20) அதிகாலை அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனையின் பின் நேற்றுமுன்தினம் இரவு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் நேற்று இறுதி கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் நல்லடக்கத்திற்காக சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதன்போது, மக்கள் சடலத்தை தோள்களில் சுமந்தவாறு நெடுந்தீவு காவல்நிலையம் முன்பாக கொண்டு சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், குறித்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய மூவரையும் விரைவாக கைது செய்யுமாறு கோரி மக்கள் சடலத்துடன் சென்று நெடுந்தீவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, காவல்துறையினரின் அசமந்த போக்கை சுட்டிக்காட்டிய மக்கள் காவல்துறையினரிடம் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு
செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு

October 1, 2026
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!

October 1, 2026
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!
செய்திகள்

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

October 1, 2026
வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
செய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

October 1, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!

October 1, 2026
Next Post
வேகமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல்; உலக சுகாதார நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வேகமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல்; உலக சுகாதார நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு