Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்

நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்

24 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைப் பிரஜைகளுக்கு நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான மோசடி முயற்சிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் நெதர்லாந்து தூதுவராலயம் அறிவித்துள்ளது.

நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து சில தரப்பினர் மக்களை ஏமாற்றி வருவதாகவும், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், ஏற்கனவே சிலர் இவற்றில் சிக்கியுள்ளதாகவும் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நெதர்லாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு சேவையால் (IND) வெளியிடப்படும் உத்தியோகபூர்வ கடிதங்களைப் போன்ற போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நெதர்லாந்து அரசாங்கம் அனைத்து வகையான வேலைவாய்ப்புகளுக்கும் தொழில் விசாக்களை வழங்குவதில்லை எனவும், குறிப்பிட்ட சில தொழில் துறைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தூதுவராலயம் தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பாக, உயர் திறன் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் உண்மையான வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள தூதுவராலயம், ஏனைய வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக எந்தவொரு நபரையும் தூதுவராலயம் பரிந்துரைப்பதோ அல்லது ஆட்சேர்ப்பு செய்வதோ இல்லை எனத் தெரிவித்துள்ளது.

எனவே, வேலைவாய்ப்பு தொடர்பில் எந்தவொரு பணப் பரிவர்த்தனையையும் மேற்கொள்வதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட வேலை வழங்குநரை நேரடியாகத் தொடர்புகொண்டு வேலைவாய்ப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இலங்கையர்களிடம் தூதுவராலயம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!
செய்திகள்

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!

November 15, 2026
வேறு நபரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டாம்; பொதுநிர்வாக அமைச்சு
செய்திகள்

வேறு நபரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டாம்; பொதுநிர்வாக அமைச்சு

November 15, 2026
தனியார் பஸ் தொழில்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த நிவாரணமும் இல்லை – கெமுனு விஜேரத்தின குற்றச்சாட்டு!
செய்திகள்

தனியார் பஸ் தொழில்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த நிவாரணமும் இல்லை – கெமுனு விஜேரத்தின குற்றச்சாட்டு!

November 15, 2026
யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை
செய்திகள்

யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

November 15, 2026
காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

November 15, 2026
அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1% அதிகரிப்பு – முதல் 8 மாதங்களில் ரூ.314.8 பில்லியன் வருமானம்!
செய்திகள்

அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1% அதிகரிப்பு – முதல் 8 மாதங்களில் ரூ.314.8 பில்லியன் வருமானம்!

November 15, 2026
Next Post
இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு