காலாவதியான பொருட்களை ஏனைய விற்பனைப் பொருட்களுக்கு அருகில் வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு 03 இல் இயங்கும் உணவகம் ஒன்றுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் ரூ.1 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, 2024 டிசெம்பர் 08ஆம் திகதியுடன் காலாவதியான 250 மில்லிலீற்றர் கருமிளகு எண்ணெய் போத்தல் ஒன்று உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த நவம்பர் 11ஆம் திகதி அதிகாரசபையினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான உணவுப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய பொருட்களுடன் சேர்த்து வைக்க வேண்டாம் என உணவகங்களுக்கும் உணவு தயாரிப்பு நிலையங்களுக்கும் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மீறல்கள் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







