Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் மதுபான உரிமப் பத்திரங்களை வழங்குவதற்கு பதிலாக ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குங்கள்!

நாட்டில் மதுபான உரிமப் பத்திரங்களை வழங்குவதற்கு பதிலாக ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குங்கள்!

2 years ago
in செய்திகள்

‘நாட்டில் தமக்கு சாதகமான பக்கங்களுக்கு கட்சி தாவும் கேவலமான அரசியலே நடைமுறையில் இருந்து வருகிறது. அதிகாரம் இல்லாத இடத்தில் பணத்தையும் சலுகைகளையும் வரப்பிர சாதங்களையும் வழங்கி தம் பக்கம் இழுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பியர் உரிமப் பத்திரம் மற்றும் மதுபான உரிமப் பத்திரங்களை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். பாடசாலைகளில் கணினிக்கு ஏற்ற ஸ்மார்ட் திரைகள் இல்லாவிட்டாலும், இது குறித்து சிந்திக்காமல் மதுபான உரிமப் பத்திரங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கொள்கை வகுப்பாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்’’ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 254ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், களுத்துறை அகலவத்தை, வெலிபன்ன ரஹ்மானியா மகா வித்தியாலத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த ஞாயிறு இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. அங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மேலும் கூறியதாவது,

அண்மைக்காலமாக அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட போலி பியர், மதுபானம் மற்றும் மதுபானசாலை உரிமப் பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இரத்துச் செய்யப்படும். நாட்டின் எதிர்காலம் மதுபான உரிமப் பத்திரங்களை அடிப்படையாகக் கொண்டமையாமல், பாடசாலை பிள்ளைகளுக்கு தகுந்த பாதுகாப்பு கருவிகளுடன் கூடிய டேப் மற்றும் ஐபேட்கள் வழங்கப்பட வேண்டும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுமாயின், அவை முறையான அமைவிட ஆய்வு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட வேண்டும்.

இந்த பாராளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு இந்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்கள், சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை மக்கள் அறியும் வகையில் பகிரங்கப்படுத்தப்படும். இதனால் மக்களுக்கு உண்மையை புரிந்து கொள்ள முடியும்.

அன்று எமது நாடு சேவைப் பொருளாதாரத்துடன் மட்டுப்படாமல், உற்பத்தி கைத்தொழில் துறையிலும் ஒரு படி முன்னேற வேண்டும் என ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று அந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியபோதும் அதன் முக்கியத்துவத்தை இன்று காணமுடிகிறது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியடைந்த துறையாக மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, மாநில முதல்வர்கள் தகவல் தொழில்நுட்ப புரட்சியை நடைமுறைப்படுத்தினர்.

இதன் விளைவாக, அமெரிக்காவின் சிலிக்கன் வெலி இந்தியர்களையே அதிக IT பணியாளர்களாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மாநில அளவில் இளைஞர்களுக்கு திறன்களை உருவாக்கும் மேம்படுத்தும் நிறுவனங்கள் கூட உள்ளன.

தற்போது, ஸ்மார்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வானிலை மற்றும் காலநிலை அபாயங்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் கட்டமைப்புத் தொகுதிகள் உள்ளன.

இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படும்போது தகவல் தொடர்பு மற்றும் முன்னெச்சரிக்கை கட்டமைப்புகள் இருந்தாலும், எமது நாட்டில் அவ்வாறான கட்டமைப்பொன்று இல்லை. இதற்கு அப்பாலான ஆயத்தங்களும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

களு, கிங் மற்றும் நில்வலா ஈர வலயத்தில் உள்ள நீரை உலர் வலயத்துக்கு திருப்பி விடும் வேலைத்திட்டம் குறித்தும் இந்த வெள்ளத்தால் விலை மதிப்பற்ற நீர்வளம் கடலில் கலப்பது குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகின்றது. மிகவும் மதிப்புமிக்க வளமான நீர் வளத்துக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது. நஷ்டஈடு வழங்கப்படுகிறதே தவிர, இவற்றைத் தடுப்பதற்கான முன்னாயத்தமோ அல்லது திட்டங்களோ இல்லை. எனவே வெள்ள அபாயத்தை தடுப்பதற்குத் தேசிய வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். இதனை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும்.

கொள்கை வகுப்பில் ஸ்மார்ட் முறையை மறந்துவிட்டு விருப்பப்படி முடிவெடுப்பதால் ஸ்மார்ட் நாடு குறித்து பேசவே முடியாது. ஸ்மார்ட் நாடு என்று பேசினாலும் ஸ்மார்ட் அரசியல்வாதிகள் இல்லாவிட்டால் இந்த புத்தாக்க திட்டங்களை முன்னெடுக்கவே முடியாது என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

August 17, 2026
நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
செய்திகள்

நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

August 17, 2026
கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!
செய்திகள்

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

August 17, 2026
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!
செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

August 17, 2026
சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!
செய்திகள்

சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!

August 17, 2026
தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
செய்திகள்

தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

August 17, 2026
Next Post
போரில் 100ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மரணம்!

போரில் 100ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.