தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் நேற்று முற்பகல் சம்பந்தனின் இல்லத்தில் அவரின்
அழைப்பின் பேரில் நடைபெற்றது.கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசல்கள், தலைமைக்கான போட்டி என்பவை தொடர்பில் ஆராயப்படும் என்ற எதிர்பார்ப்புடன் நடந்த இந்தக் கூட்டம் வெறும் தமிழரசு கட்சியின் வரலாறை மட்டும் கூறியதுடன் நிறைவடைந்ததாகத் தெரிய வருகின்றது.
அரசியல் குழு கூட்டத்தை கூட்டிய சம்பந்தன் தமிழரசு கட்சியின் வரலாறைக் கூறினார். அத்துடன், திருகோணமலை மாவடத்துக்கான தனது இணைப்பாளர் குகதாசன் நீக்கப்பட்டவிடயத்தையும் கட்சியினருக்கு தெரியப்படுத்தினார்.
இதன் பின்னர், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கி. துரைராஜசிங்கம் ஆகியோரும் கட்சியின் வரலாறு தொடர்பில் கூறினர். சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்த இந்த உரைகளின் முடிவில், எதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது என்று சிறீதரன் எம். பி. கேள்வி எழுப்பினார். எவரும் பதிலளிக்காத நிலையில், இந்தக் கூட்டம் நிறைவடைந்ததாக அறியவந்தது.