கடந்த 30 வருடங்களுக்கு மேலாக களுவாஞ்சிகுயில் மூடப்பட்டுக்கிடந்த பழைய நீதிமன்ற வீதி செவ்வாய்கிழமை(25.06.2024) மாலைஇராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் திறந்து வைத்து புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிராம பெரியோர்கள், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.