சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு பிரதி வௌியுறவுத்துறை அமைச்சர் Sun Weidong-ஐ இன்று (28) சந்தித்தார்.
தலைநகர் பீஜிங்கில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
2014 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் ( Xi Jinping) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் இதன்போது நினைவுகூற ப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ என்பவர் சீனாவின் பழைய நண்பர் என சீன பிரதி வௌியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் அழைப்பிற்கிணங்க முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோர் சீனாவுக்கு சென்றுள்ளனர்.