Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சர்ச்சை; விளக்கமளித்தது Bing Chun நிறுவனம்!

84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சர்ச்சை; விளக்கமளித்தது Bing Chun நிறுவனம்!

37 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் உணவுத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத ஐஸ்கிறீம் விற்பனை செய்தமை தொடர்பான 28 குற்றச்சாட்டுகளின் கீழ் 84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் Bing Chun Sri Lanka நிறுவனம் உத்தியோகபூர்வ விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில், கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், நிறுவனத்தின் கொம்பனித்தெரு கிளையில் விற்பனை செய்யப்பட்ட வெண்ணிலா மற்றும் சாக்லேட் ஐஸ்கிறீம்கள் நிர்ணயிக்கப்பட்ட உணவுத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

குறித்த ஐஸ்கிறீம்களின் கொழுப்புச் சத்து மற்றும் மொத்த திண்மப் பொருட்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்பதே ஆய்வகப் பரிசோதனைகளின் கண்டறிதல் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த ஆய்வறிக்கைகளில் அவை நச்சுத்தன்மை கொண்டவை, உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பவை அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், தயாரிப்புகளின் கலவை, தரக்கட்டுப்பாட்டு விபரங்கள் மற்றும் தயாரிப்பு விபரங்களை மீளாய்வு செய்து வருவதுடன், மேலதிக ஆய்வகப் பரிசோதனைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உணவுச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கச் செயற்படுவதுடன், தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி நுகர்வோரின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என Bing Chun நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு
செய்திகள்

ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

November 15, 2026
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்!
செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்!

November 15, 2026
நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
செய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!

November 14, 2026
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!

November 14, 2026
அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!
செய்திகள்

அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!

November 14, 2026
நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!
செய்திகள்

நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

November 14, 2026
Next Post
ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு