Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸி கேஸ் மூலம் ஹெரோயின் விற்பனை; தம்பதியினர் கைது!

ஈஸி கேஸ் மூலம் ஹெரோயின் விற்பனை; தம்பதியினர் கைது!

2 years ago
in செய்திகள்

‘ஈஸி கேஸ்’ (Easy Cash) முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரும் பதுளை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 15,700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் 47 வயதுடைய ஆண் ஒருவரும் 37 வயதுடைய பதுளை ஹப்புஹின்ன பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் எனவும் இவர்கள் இருவரும் தனது குடும்பத்தினை கைவிட்டுவிட்டு, இவ்விருவரும் கணவன் மனைவியாக பசறை புத்தலை வீதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருவதாகவும், இவர்கள் பதுளையை அண்மித்த பகுதிகளுக்கு ஹெரோயின் விற்பனை செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் 5000 ரூபாய் பணத்தை easy cash பணம் மூலம் அனுப்பி பசறை பதுளை வீதியில் 7ஆம் கட்டை பகுதியில் வைத்து சந்தேக நபரிடம் இருந்து 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பெற்றுக்கொண்டபோது பொலிஸார் அந்த நபரை கைது செய்து அவரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து மேலும் 7400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 12000 ரூபாய் பணமும் கையடக்க தொலைபேசி ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பசறை புத்தல வீதியில் வாடகைக்கு பெற்றுக்கொண்ட வீட்டில் சோதனையை மேற்கொண்டபோது அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அந்த நபரின் காதல் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு!

மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு