Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலை ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தயாராக இல்லை; அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு!

ரணிலை ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தயாராக இல்லை; அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஓரிரு உறுப்பினர்கள் தயாராக இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்க வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் முகமாக மாத்தறை கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

கடந்த இரண்டு வருடங்களில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அப்போது நாங்கள் அரசியல் விளையாடுவதை விடுத்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை முன்னோக்கி நகர்த்தினோம். அப்போது இருந்த பிரச்சனைகளால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது சாத்தியமில்லை என்று பலர் கூறினர்.

ஆனால் அதிபர் ரணில் விக்ரமசிங்க அந்த சவாலை ஏற்று இரண்டு வருடங்களில் நாட்டை முன்னேற்றினார்.

பேச்சுக்கே மட்டுப்படுத்தப்பட்ட தலைவர்களை எதிர்வரும் தேர்தலில் நியமிக்கக் கூடாது. நமது எதிர்காலத்தை வலுப்படுத்தக்கூடிய தலைவர் தேவை. இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் அவருக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டின் நிலைமையே மாறியிருக்கும்.

எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவோம். அந்த பலன்களை அடுத்த தேர்தலில் இழப்பீர்களா. இல்லையெனில், இப்படியே தொடரலாமா என்று யோசிக்க வேண்டும்.

இந்த நாட்டிற்கு பிரிவினைவாதிகளோ அல்லது பெருமையடிக்கும் தலைவர்களோ தேவையில்லை. மக்களுக்காக சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமைத்துவம் இந்த நாட்டுக்குத் தேவை. அத்தகையதொரு தலைமையை இன்று நாடு பெற்றுள்ளது.

எனவே,அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஓரிருவர் மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் பெரும் பகுதியினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
கள்ளக் காதலியை கொலை செய்த நபர் கைது!

கள்ளக் காதலியை கொலை செய்த நபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.