பருத்தித்துறை – புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
03ஆம் திகதி புதன்கிழமை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இப் போதைப் பொருட்கள் மீட்க்கப்பட்டன.
இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மத்திரைகள் மற்றும் தராசு ஒன்று என்பன மீட்கப்பட்டன.
இருப்பினும் சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை. பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.