கிழக்கு மாகாண அரச சேவைக்காக போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 64 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (17) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதன்படி, மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் 49 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களும், திறந்த அடிப்படையில் 6 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சாரதி பதவிகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் 2 பேரும், திறந்த அடிப்படையில் 7 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, மொத்தமாக 64 புதிய அதிகாரிகள் கிழக்கு மாகாண அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாகாண அரச சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கான சேவைகளின் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.














