Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!

16 minutes ago
in செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (18) காலை 7.30 மணிக்கு வெளியிடப்பட்ட காற்றுத் தரக் குறியீட்டின்படி (AQI), யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 186 என்ற குறியீடு பதிவாகியுள்ளது.

மேலும், கிளிநொச்சியில் 170, அனுராதபுரத்தில் 165, பத்தரமுல்லையில் 166, சிலாபத்தில் 164, திருகோணமலையில் 156 மற்றும் அக்கரைப்பற்றில் 154 என்ற அளவுகளில் காற்றுத் தரக் குறியீடுகள் பதிவாகியுள்ளன.

இந்தப் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, எல்ல பகுதியில் 101 என்ற குறியீடு பதிவாகியுள்ளதுடன், இது சற்றே ஆரோக்கியமற்ற நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரியில் 96 என்ற குறியீடு பதிவாகியுள்ளதால் அங்கு காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படுகிறது.

காற்றின் தரம் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைக் கருத்திற்கொண்டு ஆறு முக்கிய காற்று மாசுபடுத்திகளின் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.

இதன்படி, காற்றுத் தரக் குறியீட்டின் வகைப்பாடுகள் பின்வருமாறு:

  • 0 – 50: நல்ல காற்றுத் தரம்
  • 51 – 100: மிதமான காற்றுத் தரம்
  • 101 – 150: சற்றே ஆரோக்கியமற்ற நிலை
  • 151 – 200: ஆரோக்கியமற்ற நிலை
  • 201 – 300: மிகவும் ஆரோக்கியமற்ற நிலை
  • 301 – 500: அபாயகரமான நிலை

எனவே, காற்று மாசுபாடு அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள், குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தேவையற்ற வெளிப்புற நடமாட்டங்களைக் குறைத்துக்கொள்வதுடன், காற்றின் தரம் தொடர்பான அறிவிப்புகளையும் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
செய்திகள்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

November 18, 2026
மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!
காணொளிகள்

மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!

November 18, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; பதிலடியாக குவைத் மீது ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; பதிலடியாக குவைத் மீது ட்ரோன் தாக்குதல்!

November 18, 2026
கிழக்கு மாகாண அரச சேவைக்கு புதிதாக 64 அதிகாரிகள் நியமனம்!
செய்திகள்

கிழக்கு மாகாண அரச சேவைக்கு புதிதாக 64 அதிகாரிகள் நியமனம்!

November 18, 2026
2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

November 18, 2026
இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்
செய்திகள்

இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்

November 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு