Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை அணி சிம்பாப்வே பயணம்!

இலங்கை அணி சிம்பாப்வே பயணம்!

3 years ago
in விளையாட்டு

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக இன்று (09) சிம்பாப்வே புறப்பட்டுச் செல்லும் இலங்கை குழாத்தில் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸ் இடம்பெறவில்லை என்று தெரியவருகிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான இலங்கை குழாம் நேற்று (08) பின்னேரம் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அண்மையில் நிறைவடைந்த ஆப்கானிஸ்தான்அணிக்கு எதிரான 16 பேர் கொண்ட ஒருநாள் குழாத்தின் 15 வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது. இதில் மத்தியூஸ் மாத்திரம் இணைக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் சிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தற்போது இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராகவும் செயற்படும் மஹேல ஜயவர்தனவும் இணைந்துள்ளார்.

ஐ.சி.சி தொடர் ஒன்றில் பங்கேற்பதற்கான நெறிமுறையின்படி, உதவி ஊழியர்கள் உட்பட 25 பேர் கொண்ட குழாம் ஒன்றே சிம்பாப்வே செல்லவுள்ளது. இதில் இரு சிறப்பு உதவி உறுப்பினர்களான ஊட்டச்சத்து மற்றும் உளவியல் நிபுணர்கள் இலங்கை குழாத்தில் இடம்பெறவில்லை என்று தெரியவருகிறது. “ஊட்டச்சத்து நிபுணர் (டொக்டர் ஹஷான் அமரதுங்க) மற்றும் உளவியல் நிபுணர் (டொக்டர் பேடினன் பெரேரா) இருவரும் அணியுடன் வெற்றிகரமாக பணியாற்றுகின்றனர். நாம் மட்டுப்படுத்தப்பட்ட உதவி ஊழியர்களையே சிம்பாப்வேயுக்கு அனுப்புகின்றபோதும், எமது அணி உலகக்கிண்ணத்திற்கு தகுதி பெற்றால் நிச்சயம் நாம் அவர்களைஅனுப்ப முயற்சிப்போம்” என்று இலங்கை கிரிக்கெட் ஊடகப் பிரிவுத் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.

தேர்வுக் குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க தேர்வாளராக இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்துள்ளார்.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கை, அயர்லாந்து, ஓமான், ஸ்கொட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பி குழுவில் இடம்பெற்றுள்ளது. ஏ குழுவில் மேற்கிந்திய, தீவுகள், நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, சிம்பாப்வே அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.

இலங்கை குழாம்: தசுன் ஷானக்க(தலைவர்), குசல் மெண்டிஸ் (உபதலைவர்), பத்தும் நிசங்க, திமுத் கருணாரத்ன, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமன்த, சாமிக்க கருணாரத்ன, துஷ்மன்த சமீர, லஹிரு குமார, கசுன் ராஜித்த, மதீஷ பதிரண.

தொடர்புடையசெய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!
உலக செய்திகள்

23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!

July 20, 2026
LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!
செய்திகள்

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

July 17, 2026
Next Post
மட்டு காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு செயலணிக் கூட்டம்!

மட்டு காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு செயலணிக் கூட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.