மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி, 2026ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
அதிகஷ்ட பிரதேச பாடசாலையொன்றிலிருந்து தேசிய மட்டத்திற்கு முன்னேறிய மாணவிகள், பல முன்னணி பாடசாலை அணிகளை வீழ்த்தி இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர்.
நீண்டகால பயிற்சியின் பலனாக இந்த அணியின் தொடர் வெற்றிகள் அமைந்துள்ளன. 2023, 2024, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் மாகாண மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக முதலிடத்தைப் பெற்ற இவர்கள், தற்போது தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், அண்மையில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான தேசிய விளையாட்டு விழாவின் கிழக்கு மாகாண மட்ட கைப்பந்து போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வவுனதீவு வீராங்கனைகள் சம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










