Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை

1 hour ago
in செய்திகள், விளையாட்டு

தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தங்களது வர்த்தக நிலைமைக்கு ஏற்ப எரிபொருளுக்கான விலையை தீர்மானித்து விற்பனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நிர்ணயிக்கும் விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால் தனியார் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால், அதனை அரசாங்கம் ஈடுசெய்ய வேண்டிய ஒப்பந்த ஏற்பாடு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறிப்பிட்ட விலையில் எரிபொருளை விற்பனை செய்யுமாறு தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் இதுவரை எழுத்துப்பூர்வமான எந்தவொரு உத்தரவையும் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், தற்போது அந்த நிறுவனங்கள் CPC நிர்ணயிக்கும் விலையை தாமாகவே பின்பற்றி வருவதாகவும், நஷ்டம் ஏற்படுவதாக கருதினால் தங்களுக்கேற்ற விலையை நிர்ணயித்து எரிபொருளை விற்பனை செய்ய முடியும் எனவும் CPC தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உலக சந்தையில் பாரிய மாற்றங்கள் ஏற்படாத பட்சத்தில், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் CPC எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான எந்தவொரு தயாரிப்பும் இல்லை எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சந்தையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை சமாளித்து, மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல் எரிபொருள் விநியோகத்தை தொடரும் திறன் CPCக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் தற்போதைய எரிபொருள் கையிருப்பு தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், எதிர்வரும் காலத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷ கைது
செய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷ கைது

October 7, 2026
2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!

October 7, 2026
ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்
செய்திகள்

ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்

October 7, 2026
குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை
செய்திகள்

குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை

October 7, 2026
திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
Next Post
ஷிராந்தி ராஜபக்ஷ கைது

ஷிராந்தி ராஜபக்ஷ கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.