கத்தார் விசா மையங்களில்(QVC) நடத்தப்படும் கண் பரிசோதனை கத்தார் போக்குவரத்துப் பிரிவோடு இணைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் கத்தார் விசா மையங்களில் கண் பரிசோதனை முடிவுகளை போக்குவரத்துப் பிரிவின் உரிமம் வழங்கும் ஆணையம் பெற்றுக்கொள்ளும். இதன் மூலம், கத்தாருக்கு டிரைவராக பணிபுரிய வருபவர்கள், உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது வழக்கமாக செய்யும் கண் பரிசோதனை அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.