Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு திருப்பெரும்துறை பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 12 நிலக் கண்ணிவெடிகள் மீட்பு!

மட்டு திருப்பெரும்துறை பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 12 நிலக் கண்ணிவெடிகள் மீட்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு விமான நிலையத்தின் எல்லையான திருப்பெரும்துறை பகுதியில் 12 நிலக் கண்ணிவெடிகளை கண்ணிவெடி அகற்றும் சர்வதேச நிலச்சுரங்க ஆய்வு குழுவான (எம்.ஏ.ஜி) அமைப்பினர் மீட்டெடுத்து நீதிமன்ற அனுமதியுடன் இராணுவத்தினர் அதனை வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்துள்ளனர்.

குறித்த நடவடிக்கையானது நேற்றையதினம் (05) இடம்பெற்றுள்ளது.

யுத்தகாலத்தில் திருப்பெரும்துறை வேளாங்கன்னி தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட விமானப்படை முகாமை சுற்றி அந்த பகுதியில் ஏராளமான கண்ணிவெடிகள் நிலத்தில் புதைத்திருந்தனர்.

இந்த நிலையில் அங்கிருந்து விமானப்படை முகாம் மூடப்பட்டு படையினர் வெளியேறிய போதும் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருந்துள்ள நிலையில் அவற்றை அகற்றுமாறு படையினர் எம்.ஏ.ஜி கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திடம் கோரியதையடுத்து அந்த பகுதியினை அவர்கள் அடையாளமிட்டு கண்ணிவெடிகளை தேடி சோதனையிடும் நடவடிக்கையினை புதன்கிழமை (04) ஆரம்பித்தனர்.

இதன் போது அந்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 12 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து மீட்டெடுத்தனர்.

இதனை உடனடியாக செயலிழக்க வேண்டியதையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று மின்னேரியாவிலுள்ள குண்டுகளை செயலிழக்கும் இராணுவப் பிரிவினரை வரவழைத்து அதனை வெடிக்கவைத்து செயலிழக்க செய்தனர்.

இதேவேளை குறித்த பகுதியில் மக்கள் குடியேறி வசித்துவருவதாகவும் தொடர்ந்தும் கண்ணிவெடிகள் உள்ள பகுதிகள் அடையாளமிடப்பட்டு சோதனை நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றதுடன் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் மனிதர்களோ மிருகங்களோ இன்று வரை அதில் அகப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
கோழி இறைச்சியின் விலை குறையும் சாத்தியம்!

கோழி இறைச்சியின் விலை குறையும் சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு