பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த ரஷ்ய நாட்டுப் பிரஜை ஒருவர் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், 30 வயதுடைய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கடல் அலையின் தாக்கத்தினால் அவர் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பெந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







