கிளிநொச்சி – இரணைமடு சந்திக்கு அருகில் பேருந்தில் பயணித்த இருவர் மீது நேற்று (06) மாலை வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பேருந்தில் வைத்தே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புதுமுறிப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.