Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூதூரில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு; ஏழு பேர் கைது!

மூதூரில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு; ஏழு பேர் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியின் காதலனான பிரதான சந்தேக நபர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று (8) மூதூர் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இன்று வரை (9) பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (5) ஆறு சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமை (6) மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை அந்த ஆறு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே பிரதான சந்தேக நபரான படுகொலை செய்யப்பட்ட யுவதியின் காதலன் நேற்றுமுன் தினம் (7) மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை யுவதியின் காதலன், காதலனின் தந்தை, சகோதரி, அவரது வீட்டில் வேலை செய்தவர், ஜேசிபி வாகன சாரதிகள் இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது 25) என்ற யுவதி காணாமல் போயிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (5) பாழடைந்த கிணறு ஒன்றில் கல்லோடு கட்டி போடப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவருடைய ஆவணங்கள் அடங்கிய கைப்பை, உடைந்த தலைக்கவசம் என்பனவும் மீட்கப்பட்டிருந்தன.

இந்த சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது தலைப்பகுதி தாக்கப்பட்டு மண்டையோடு உடைந்திருந்ததாகவும், தலையின் பின்பகுதியில் பாரிய துளை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீவிர விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், காதலனின் வீட்டில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரும்புக்குழாய் உட்பட சில சான்றுப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
முஸ்லிம் கட்சிகள் புகழ்வது போன்று சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவிப்பு!

முஸ்லிம் கட்சிகள் புகழ்வது போன்று சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு