Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுவனின் உயிரை காப்பாற்றிய மாணவன்!

கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுவனின் உயிரை காப்பாற்றிய மாணவன்!

2 years ago
in செய்திகள்

புத்தளம் மஹகும்புக்கடலை பிரதேசத்தில் கிணற்றில் இருந்த மீன்களை பிடிப்பதற்காக குதித்து நீரில் மூழ்கிய சிறுவனை 15 வயது பாடசாலை மாணவன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தளம், மஹகும்புக்கடலை, கிவுல இலக்கம் 4 கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய ஆகாஷ் நெதுமின என்ற சிறுவனே கிணற்றில் விழுந்துள்ளார்.

கிணற்றில் தண்ணீர் கலங்குவதைக் கண்டு சசிந்து நிம்சர என்ற பாடசாலை மாணவன் கிணற்றில் குதித்து குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் கூச்சலிடம் சத்தம் கேட்டு விரைந்து சென்ற சசிந்து, சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதை தெரிந்து கொண்டு உடனடியாக கிணற்றில் குதித்து சிறுவனை காப்பாற்றியுள்ளார்.

சசிந்துவின் வீரச் செயலில்லாமலிருந்தால் அந்த குட்டி மகன் உயிரிழந்திருப்பார் என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

36 அடிக்கு மேல் ஆழமுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்துள்ளதுடன், அதன் பக்கவாட்டு சுவர்கள் மழை காரணமாக கிணற்றுக்குள் இடிந்து விழுந்துள்ளது.

நீரில் மூழ்கிய சிறுவன் சசிந்துவின் வீட்டிற்கு வழமையாக வந்து செல்வதாகவும், சசிந்துவின் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது வீட்டுக்கு செல்லும் போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுவன் சசிந்து தெரிவித்தது,

தம்பிக்கு நான் சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தேன். அவர் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் செல்வதாய் கூறி விட்டு சென்றார். நான் சமையல் அறைக்குச் சென்று கோப்பையை கழுவி விட்டு வௌியே வரும் போது, சசிந்து அண்ணா என்று சத்தம் கேட்டது.

நான் உடனடியாக கிணறு இருக்கும் பக்கத்திற்கு சென்று பார்த்தேன். அப்பொழுது தம்பி கிணற்றில் மூழ்குவதை கண்டு, உடனடியாக கிணற்றில் குதித்தேன். பின் மேலே வந்த தம்பியை பிடித்துக் கொண்டேன். அத்தோடு அருகில் இருந்து மோட்டாருக்கான குழாயை பிடித்துக் கொண்டு சத்தமாக கத்தி உதவி கோரினேன். பின்னர் தம்பியின் அம்மாவும் ஏனையோரும் வருந்து எங்களை காப்பாற்றினர்.

தொடர்புடையசெய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!
செய்திகள்

பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

September 30, 2026
டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
Next Post
யாழில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றில் வைத்து தப்பியோட்டம்!

யாழில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றில் வைத்து தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு