Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா பிரதிநிதி!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா பிரதிநிதி!

2 years ago
in செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகர் லூடியானா செல்றீன் அகிலன் முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்தநிலையில், கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு இடத்திற்கு நேற்று (09) பிற்பகல் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, லூடியானா செல்றீன் அகிலன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் ஆகியோரிடம் குறித்த புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.

இந்தநிலையில் , குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கடந்த (04.07.2024) அன்று ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

தொடர்புடையசெய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்;  மொனராகலையில் விநோத சம்பவம்
செய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்

September 30, 2026
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்
செய்திகள்

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்

September 30, 2026
புறக்கோட்டையில் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!
செய்திகள்

புறக்கோட்டையில் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!

September 30, 2026
8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!
செய்திகள்

8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

September 30, 2026
பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

September 30, 2026
மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
Next Post
அரச நிறுவனங்களின் வரவு செலவு அறிக்கைகளை கோர நடவடிக்கை!

அரச நிறுவனங்களின் வரவு செலவு அறிக்கைகளை கோர நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு