Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!

மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!

51 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இரண்டு பசுக்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சந்திவெளிப் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற பண்ணையாளருக்குச் சொந்தமான இரண்டு பசுக்களே கடந்த (12) ஆம் திகதி இரவு இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட இரண்டு பசுக்களின் மொத்தப் பெறுமதி 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தனது வாழ்வாதாரமாக விளங்கிய கால்நடைகள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் நீதி கோரி, பாதிக்கப்பட்ட பண்ணையாளர் மயிலத்தமடு – மாதவனை பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காகச் சென்றுள்ளார்.

எனினும், கொல்லப்பட்ட பசுக்களின் பெறுமதி அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி முறைப்பாட்டைப் பதிவு செய்ய பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது கால்நடைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இச்சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளும் பாதுகாப்புத் தரப்பினரும் உடனடியாகத் தலையிட்டு, பசுக்களைச் சுட்டுக்கொன்றவர்களைக் கண்டறிந்து கைது செய்வதுடன், பாதிக்கப்பட்ட பண்ணையாளருக்கு உரிய நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!
செய்திகள்

நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!

November 14, 2026
மக்கள் மீதான அழுத்தங்கள் வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; லஹிரு வீரசேகர எச்சரிக்கை!
செய்திகள்

மக்கள் மீதான அழுத்தங்கள் வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; லஹிரு வீரசேகர எச்சரிக்கை!

November 14, 2026
மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் 09 நாட்களின் பின்னர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் 09 நாட்களின் பின்னர் உயிரிழப்பு!

November 14, 2026
களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

November 14, 2026
வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி
செய்திகள்

வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி

November 14, 2026
அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
செய்திகள்

அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

November 14, 2026
Next Post
நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!

நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு